Tuesday, August 17, 2010

ஜேர்மனியின் பாடகி நட்ஜா பெனைய்சா எச் ஐ வி தொடர்பான வழக்கு விசாரணையில் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஏச் ஐ வியினால் பீடிக்கப்பட்டுள்ள அவர் எந்தவொரு முன்எச்சரிக்கையும் இன்றி பல ஆடவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பான முதலாவது வழக்கு விசாரணை ஜெர்மனியின் டார்ம்ஸ்ராட் நகரிலுள்ள நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது அவர் பகிரங்கமாக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

நுபர் ஒருவருக்கு எச் ஐ வி தொற்றை ஏற்படுத்தினார் என இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.வேறு இரண்டு நபர்களுடனும் உடலுறவு செய்ய முயற்சித்தார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இவருக்கு ஆறு மாதம் தொடக்கம் 10 வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment