ஏச் ஐ வியினால் பீடிக்கப்பட்டுள்ள அவர் எந்தவொரு முன்எச்சரிக்கையும் இன்றி பல ஆடவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பான முதலாவது வழக்கு விசாரணை ஜெர்மனியின் டார்ம்ஸ்ராட் நகரிலுள்ள நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது அவர் பகிரங்கமாக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
நுபர் ஒருவருக்கு எச் ஐ வி தொற்றை ஏற்படுத்தினார் என இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.வேறு இரண்டு நபர்களுடனும் உடலுறவு செய்ய முயற்சித்தார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவருக்கு ஆறு மாதம் தொடக்கம் 10 வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Tuesday, August 17, 2010
ஈராக் தலைநகரிலுள்ள இராணுவ ஆட்சேர்ப்பு நிலையத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல்…
ஈராக்கின் தலைநகர பாக்தாத்திலுள்ள இராணுவ ஆட்சேர்ப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட தறகொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக ஈராக் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆமெரிக்க படையினரின் படைநடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் நிறைவடையுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கூட்டிணைந்த அராங்கத்தினை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டு ஒருநாள் கழிந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈராக்கில் இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக கடந்த யூலை மாதம் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தமை குறிப்பிடதக்கது.
ஏற்கனவே ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் படையினர் மற்றும் வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் மீது நாளாந்தம் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றமை வழமையாகியுள்ளது.
இந்த மாகாணத்தில் ஆகஸ்ட் மாதத்தின் முதலிரண்டு வாரங்களில் மாத்திரம் தாக்குதல்கள் காரணமாக 30 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடதக்கது.
இராணுவத்தில் சேர்வதற்கான நீண்ட வரிசையின் நின்ற பொதுமக்கள் மீதே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈராக்கில் வேலைவாய்பற்றோரின் தொகை அதிகரித்து வருகின்றது.
மக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் நகரின் பிரதான பஸ்திரிப்பிடத்துக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோராத நிலையில் ஈராக்கில் இயங்கும் அல் கைய்தா அமைப்பு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஈராக்கில் வாரந்தம் 250 பேர் இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர்.
இதன் மூலம் ஆயுத ஏந்திய இராணுவத்தினர் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாதத்தின் இறுதியில் ஈராக்கில் தங்கியுள்ள அமெரிக்க படையினரின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக அமெரிக்கா குறைக்கவுள்ளதுடன் 2011 ஆண்டின் இறுதியில் முழு துருப்பினரையும் வாபஸ் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.
இவ்வாறு புதிதாக இணைக்கப்படும் படையினருக்கு பயிற்சிகளை வழங்க அடுத்த வருடம் வரை ஈராக்கில் அமெரிக்க படையினர் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இரகசிய இராணுவ விஸ்தரிப்பும் அமெரிக்காவின் பீதியும்…..
சீனா தனது இராணுவ விஸ்தரிப்புக்களை இரகசியமாக மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனா தனது இராணுவ வளர்ச்சிகளை மூடி மறைப்பது புரிந்துணர்வின்மை மற்றும் தவறான கணிப்புக்கள் ஏற்படுவதை அதிகரிக்குமென அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில தள ஏவுகணைகளை தரமுயர்த்;துவதுடன், நீர் மூழ்கி படை மற்றும் ஆயுத உற்பத்தி சாலை என்பற்றினை விஸ்தரித்து வருவதாக பெண்டகனின் வருடாந்த அறிக்கையை ஆதாரம் காட்டி அமெரிக்க காங்கிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் தாய்வான் மீதான மேலாதிக்கத்தையும் சீனா அதிகரித்து வருவதாக தெரவிக்கப்படுகின்றது.
சீனாவின் மிக வேகமான வளர்ச்சி தொடர்பாக அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.1,150 குறிந்தூர ஏவுகணை மற்றும் எண்ணிக்கை தெரியாத மத்திய தூர ஏவுகணைகளை விஸ்திரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் புல பில்லியன் டொலர்கள் இராணுவ விஸ்தரிப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.வரையறுக்கப்பட்ட நிலையில் இருந்த சீனாவின் இராணுவம் மற்றும் பாதுகாப்பு நலன்கள் நீடீரென அதன் சக்தியை அதிகரித்துள்ளமை தவறான எண்ணங்களையும் தவறான கணிப்புக்களையும் உருவாக்குமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் கொரிய மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பாரிய பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டமையே தமது இராணுவ விஸ்தரிப்புக்கு காரணமென சீனாவின் இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமது உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற முறையில் தலையீடுவதாகவும் குறிப்பாக தென் சீன கடற்பகுதி தொடர்பான அமெரிக்கா இவ்வாறு நடந்து கொள்வதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
அண்மையில் வியட்நாமில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் சீனாவுக்கு சொந்தமற்ற கடற்பரப்பு உரிமையாளர்கள் குறித்து ஆதரவு வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹில்லரி கிளின்டன் தெரிவித்திருந்தார்.
அத்துடன் வியட்னாமுடன் இணைந்து ஒருவார இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது. அமெரிக்க மற்றும் சீன நாடுகளின் இராணுவங்களுக்கு இடையில் தொடர்புகளை பேணுவதை சீனா இடைநிறுத்தியதுடன் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ரொபேட் கேட்சை சந்திப்பதையும் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் சீனா பாதுகாப்பு செலவீனத்தை தனது வரவு செலவு திட்டத்தில் 7 தசம் 5 வீதத்தால் உயர்த்தியிருந்தது.
இது 77 தசம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.அமெரிக்காவின் வருட பாதுகாப்பு செலவீனம் 700 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இந்த சர்ச்சைகளுக்கு இடையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவும் தவறான கணிப்புக்களை தவிர்க்க பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆசியாவில் மிகவும் பலம்பொருந்திய இராணுவத்தினை சீனா கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Monday, August 16, 2010
பாகிஸ்தானில் மூன்று மில்லியன் சிறுவர்களுக்கு சுகாதராப் பாதிப்புக்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஐநா எச்சரிக்கை …….
பாகிஸ்தானில் 3 தசம் 5 மில்லியன் சிறுவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதாக ஐக்கியநாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 3 தசம் 5 மில்லியன் சிறுவர்கள் நீர் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகும் அபயாம் அதிகளில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தென் பகுதி மாகாணங்களான சிந்து மற்றும் அதற்கு அண்மையிலுள்ள பாலோசிரான் பகுதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தினால் பாரிய அழிவைச் சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்
இந்த மாகாணங்களில் வசித்த பலர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்
பாகிஸ்தானுக்கு விஐயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெள்ளம் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தப் பகுதிகளிலுள்ள சிறுவர்கள் டயரியா மற்றும் வாந்திபேதி போன்ற நீர் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக மனிதாபிமானத்துக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மவ்றிசோய் கீயூலியானோ தெரிவித்துள்ளார்.
இந்த நோய்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்க சுத்தமான குடிநீர் தேவைப்படுவதாகவும் வெள்ளத்தினால் பாகிஸ்தானில் நீர் நிலைகள் அசுத்தமடைந்துள்ளதால் நீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் கூறியுள்ளார்.
கொலாரா போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உலக சுகாதார ஸ்தாபனம் பல்வேறு தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது.எனினும் கொலாராவினால் பாதிப்பட்டவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென ஐக்கிய நாடுகள் சபையை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் அரசாங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நோய் தாக்கத்துக்கு அண்ணளவாக ஆறு மில்லியன் மக்கள் உள்ளாகும் ஆபத்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் அச்சம் உள்ளதாக பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் மெஹ்மூட் குரோஷி கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் சிந்து மற்றும் பலோசிற்ரான் மாகாணங்களின் தெற் பகுதிகளில் மேலதிக இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தினை காட்டி ஆயுததாரிகள் இலாபம் அடைய இடமளிக்கப்படமாட்டாது என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சிந்து மாகாணத்தில் பிரதான வீதிகள் பல தடைப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 460 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்ற போதிலும் இதுவரை 125 மில்லியன் அமெரிக்க டொலர்களே வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
இந்தப் பகுதிகளுக்கு நேற்று விஐயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உதவிகளை விரைவுபடுத்ததும் படி வலியுறுத்தியிருந்தார்.ஐக்கிய நாடுகள் சபையின் அவசரநிலைமைகளுக்குப் பொறுப்பான நிலையமத்தின் நிதியில் இருந்து மேலதிகமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
அத்துடன் 459 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரணப் பணிகளுக்கான தேவைப்படுவதாக கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது.நீண்ட கால அடிப்படையில் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுமெனவும் ஐக்கியநாடுகள் சபை கூறியிருந்தது.
ஐந்தில் ஒரு பங்கு பாகிஸ்தான், வெள்ளத்தால் அழிவுகளைச் சந்தித்துள்ளதாகவும் பான் கீ மூன் குறிப்பிட்டிருந்தார்.பாகிஸ்தான் அரசாங்கத்தின் தகவல்களின் படி இதுவரை 20 மில்லியன் மக்கள் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு குறைந்ததது 1500 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு வாரங்களுக்கும் அதிகமாக பாகிஸ்தானின் நான்கில் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருந்ததுடன் பல விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தது.
இந்த அனர்த்தம் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் நீண்ட காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமென சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரிட அமெரிக்க ஏற்கனவே 70 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.

Subscribe to:
Posts (Atom)